Uppu KalluMovie Lyrics Online Download Now

Wednesday, March 18, 2009

Uppu KalluMovie Lyrics Online Download:
Karuppasamy Kuthagaitharar Film

ஓ......
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது...

தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான் தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன் இது கனவா... இல்லை நெஜமா... தற்செயலா... தாய் செயலா... நானும் இங்கு நானும் இல்லையே! ...

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாற்றினாய் தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன்...

- நீ தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய் கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள் உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன் மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள் உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன் உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது....


என் ஓ... ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது ஓ... மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் ....

உன் பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும் உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும் கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது....

நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான் தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன் இது கனவா... இல்லை நெஜமா... தற்செயலா... தாய் செயலா... நானும் இங்கு நானும் இல்லையே! உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது.

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP