The Next Big Film For Ajith And Saran
Wednesday, April 8, 2009
The Next Big Film For Ajith And Saran Is "ASAL" THE REVIW ABOUT THE FILM IS NOW ONLINE FOR FREE....
அன்னை இல்லத்தின் வாசலை கடக்கவே முடியாதபடி ரசிகர்களின் நெரிசல்! திக்கி திணறிதான் உள்ளே வந்தார்கள் விவிஐபிகள் கூட! அஜீத்தின் புகழ் பாடும் பேனர்களும், கோஷங்களும் ஐம்புலன்களையும் தாக்கியது. இது 'அசல்' படத்துவக்கவிழா. நடிகர் திலகம் அமரர் சிவாஜிகணேசன், கமலாம்பாள் ஆசியோடு அன்னை இல்லத்தில் நடந்த விழாவில், ரஜினி, வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். 'இங்கிருந்துதான் வீரபாண்டிய கட்டபொம்மன், பாலும் பழமும், பாசமலர் போன்ற அற்புதமான படங்களின் ஷ§ட்டிங்கிற்கு கிளம்பியிருப்பார் சிவாஜி. அதனால்தான் இது அன்னை இல்லம். இங்கே இந்த படத்தின் துவக்க விழா நடைபெறுவது மிகவும் பொறுத்தமானது' என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.'நான் எந்த விழாவுக்கும் எனது மகள் சௌந்தர்யாவுடன் போனதில்லை. நேற்றே சௌந்தர்யாவிடம், 'நாம் அன்னை இல்லத்துக்கு போக வேண்டும். தயாராக இரு' என்றேன். சந்திரமுகி படத்தின் துவக்க விழாவை இங்கேதான் நடத்தினோம். பாபாவின் தோல்விக்கு பிறகு ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தேன். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு வெற்றியை தர வேண்டும் என்ற நிலையில் இருந்தார் தயாரிப்பாளர் ராம்குமார். அமரர் சிவாஜியின் ஆசிர்வாதம் அந்த படத்தை வெற்றியடைய வைத்தது'.
'அன்று நான் இருந்த மனநிலையில்தான் இருக்கிறார் அஜீத். இங்கே நடக்கும் இந்த துவக்க விழா அவருக்கு நிச்சயம் வெற்றியை தரும்' என்றவர், ஒருகட்டத்தில் 'அசல் நாயகன்' என்று அஜீத்தை பாராட்ட, சந்தோஷத்தில் பூரித்தார் தல!
'உங்கள் அன்புக்கு நான் சரண்' என்று டைமிங்காக நன்றியுரை ஆற்றினார் டைரக்டர் சரண்!